கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது(video)
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பதினையாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி, ஜஸ் போதப்பொருள் பயன்படுத்தும்போது படமாக்கப்பட்ட படத்தட்டு ( சிடி) ஆகியனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் (07.12.2022) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபும் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
