யாழில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுப்பட்ட நபர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (15.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய் பணத்தையும் ஐந்தரைப் பவுண் பெறுமதியான நகையையும் திருடிச் சென்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருடியதாக சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
