யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (01.06.2024) அதிகாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சி வியாபாரம் செய்யும் 42 வயதுடைய நபர் ஒருவர், வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்க்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மீதும் தாக்குதல் நடாத்திய கொள்ளையர்கள் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள் அங்கு சென்று கூரிய ஆயுதத்தால் படுகாயப்படுத்தப்பட்டிருந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
