முல்லைத்தீவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது மறைத்து வைக்கப்பட்டு 160 சிறு சிறு பொதிகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 16 லீற்றர் சட்டவிரோத கசிப்பு பைக்கற்றுக்களுடன் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்துப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam