ஜனாதிபதி நியமித்த குழுவால் புதிய சட்ட வரைவு கையளிப்பு
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆக்கபூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்ட வரைவு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்ட வரைவு, சமன் ஏக்கநாயக்கவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவாலேயே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த புதிய வரைவைத் தயாரிப்பதற்காக தணிக்கை சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
படைப்பு சுதந்திரம்
குறித்த குழுவில், திரைப்படவியலாளர் அசோக ஹாதகம, நாடகக் கலைஞர் ராஜித திஸாநாயக்க, படைப்பாளர் அனோமா ராஜகருணா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்ரமநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், திரைப்படம், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு
தரப்பினருடன் கலந்தாலோசித்து புதிய சர்வதேச போக்குகள் மற்றும் தரநிலைகளுக்கு
ஏற்ப இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1912ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொது அரங்கேற்றக்கலை கட்டளைச் சட்டத்தினை ஆராய்ந்து இந்தப் புதிய சட்டத்தைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சட்டத்தின் ஊடாக கலைப் படைப்புகள் தொடர்பில் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், இந்தச் சட்டத்தின் மூலம் படைப்பு சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் குழுவின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தெரிவித்துள்ளார் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 16 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
