மன்னாரில் பல கோடி ரூபாய் செலவில் உயர் தொழிநுட்பவியல் நிறுவனம்
உலக வங்கியினால் 52 அரைக்கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தின் புதிய கட்டடமொன்றிற்கு மன்னார் மாவட்டத்தில் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
2017 ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் உயர் தொழிநுட்பவியல் நிறுவனமொன்று நிறுவப்பட வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு தொடர்ச்சியாக குரல் கொடுத்தமைக்கு பயனாக இன்றையதினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் கல்வி இணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற மதத்தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்டத்தின் எதிர்கால நன்மைக்காக இந்த உயர் தேசிய கல்வி நிறுவகம் நிறுவப்படுவது மன்னார் மாவட்ட கல்வி சமூகத்தினால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், இதற்காக கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.








பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
