இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்த தாய்! சிகிச்சைப் பலனின்றி அவரும் மரணம்
புதிய இணைப்பு
சந்திரிகா வாவியில் குதித்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரை மாய்துக் கொள்வதற்காக தனது பிள்ளைகளுடன் அந்த தாய் வாவியில் குதித்துள்ளார்.
குறித்த தாயின் ஒரு மகள் ஏற்கனவே உயிரிழந்ததுடன், ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாயார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வாவியில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார்.
குறித்த தாய்க்கு (32) வயது என தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் தாய் மற்றும் மகன் (11 வயது), மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகள் உயிரிழப்பு
மேலும் சம்பவத்தில் 05 வயது மகள் உயிரிழந்துள்ளார்.
தாய் இவ்வாறு செய்தமைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இச் சம்பவம் தொடர்பிலாள மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்கள் நாட்டை முடக்குமாறு கோரிக்கை |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
