பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கோடீஸ்வரர்களை ஏமாற்றும் கும்பல்
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் தங்க நாணயங்கள் மற்றும் பொக்கிஷங்களில் இருந்து பெறப்படும் நகைகளை என கூறி இரும்பு துண்டுகளை வழங்கி செல்வந்தர்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடி மூலம் நாடு முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களிடம் பல கோடி ரூபா பணம் சம்பாதித்து வரும் பல குழுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடியாளர்களுக்கு அப்பகுதியில் உள்ள பல உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால், அவர்கள் இந்த மோசடிகளை பகிரங்கமாக நடத்துவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோசடியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு
அப்பகுதியில் உள்ள பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த மோசடியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களின் சொகுசு வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியாளர்கள் மீது பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வந்தாலும், இந்த உயர் பொலிஸ் அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவை முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
பொக்கிஷங்களில் இருந்து பெறப்படும் தங்கக் காசுகளை தங்க ஆபரணங்களுக்கு தருவதாகக் கூறி அவர்களை அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அழைத்து வந்து பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுக் கொண்டு இரும்பு துண்டுகளை கொடுத்து ஏமாற்றும் செயற்பாடு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள பணக்காரர்கள் இந்த கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |