யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்
யாழில் வீதியால் சென்ற நபர் ஒருவரை வழிமறித்த மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீதியால் சென்ற குறித்த நபரை வழிமறித்த கும்பல் எங்கே செல்கிறாய் என விசாரித்த பின்னர் அவரை வீதியிலே கட்டிவைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடிய வேளை தாக்குதலை நடாத்திய குறித்த குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்கப்பட்ட நபர் தலையில் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan