மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்! மயானத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனம்
கொலொன்ன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வானில் தெனியாய நகருக்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததால் குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதேவேளை அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில், பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் எமது செய்தி சேவை கொலொன்ன பொலிஸாரை தொடர்புகொண்ட போது வர்த்தகர் காணாமல் போன விடயத்தை உறுதி செய்ததுடன் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் அதிகாரிகள் குழு களத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |