போரின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த செய்தி! விடுதலைப் புலிகளின் தலைவரும் பொட்டம்மானும் உயிருடன் இருக்கலாம்:ஜெயபாலன்
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அவை உறுதிப்படுத்தப்படவில்லை அவை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எனவே இன்னும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருந்து அதை உறுதி செய்துக்கொள்ளலாமே என அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தொடர்பில் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இறுதிக்கட்டத்தில் பிரபாகரன்
மேலும் கூறுகையில்,போரின் இறுதிக்கட்டத்தில் முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் உள்ள வண்டல் (அலையாத்தை) காடுகளில் நின்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போராடிய செய்தி தனக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பின் பல தளபதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொட்டம்மான் மற்றும் பல தளபதிகள் தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகளில் இருப்பதான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் இறுதிகட்ட போரில் பொட்டம்மானின் இறப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. போர் முடிவில் தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் போன்ற நாடுகளில் பொட்டம்மான் இருப்பதாகவும் பின்னர் மருத்துவ தேவைகளுக்காக இத்தாலி சென்றதாகவும் தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்ற வேண்டும் எனும் சித்தார்ந்தத்தில் இருந்தன.
அதாவது மூன்றாவது நாட்டிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு சரணடைய வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில்,அல்-காய்தா அமைப்பை போன்ற அமைப்புகளை அவர்கள் சித்தார்ந்த பயங்கரவாதிகள் எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பு,கொசோவா அமைப்பு போன்ற அமைப்புக்களை நிலபரப்பு சார்ந்த பயங்கரவாதிகள் எனவும் கூறி இந்த அடிப்படையில் தான் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மூன்றாவது நாட்டிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு சரணடைய தயார் என்றால், அமெரிக்கா சரணாகதியை ஏற்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு உரிய பதிலை வழங்கவில்லை எனவும் தெரியவந்தது.
தலைவன் உயிருடன் இருந்தால் இழுக்கென நினைப்பது அறியாமை
இது ஒருபறமிக்க, சோனியா அம்மையார் முழு ஈழத்தமிழர்களும் அழிந்தாலும் பரவாயில்லை. பிரபாகரன் இறக்கும் வரை யுத்தம் செய்யும் படி உத்தரவிட்ட தகவலை சிங்கள தலைவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேலும்,1987 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் முதல் முறையாக எமது பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம் சோனியா அம்மையார் இலங்கைக்கு அனுப்பிய இராணுவம் தான். அதற்கு பின்னர் தான் சிங்கள இராணுவம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய ஆரம்பித்தது.
இவ்வாறான ஒரு சூழலில் இறுதிக்கட்டத்தில் முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் உள்ள வண்டல் (அலையாத்தை) காடுகளில் நின்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போராடிய செய்தி தனக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.
இதேவேளை போரில் தோற்ற தலைவன் உயிருடன் இருந்தால் இழுக்கென நினைப்பது அறியாமை என விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் எனும் செய்தி அவருக்கு வரலாற்று ரீதியான இழுக்கு என முன்னாள் போராளிகள் தெரிவித்து வரும் கருத்துக்கும் அவர் பதில் வழங்கியுள்ளார்.