பருத்தித்துறை நகர சபை தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு.. நிராகரித்த நகர சபை தலைவர்!
பருத்தித்துறை நகர சபை தலைவருக்கு எதிராக சபை உறுப்பினர் திருஞானசம்பந்தர் சந்திரசேகர் இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம் (21.05.2026) பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு நிறைவுற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
நகர சபை தலைவர்
இதன்போது, கடந்த சபைக் கூட்டத்தின் போது கணக்காய்வாளர் ஒருவருக்கு எதிராக தான் கருத்து தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சபை தலைவரிடம் விளக்கம் கேட்ட போது நகர சபை தலைவர் கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதாக திருஞானசம்பந்தர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடமராட்சி - தும்பளை, நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் எவற்றையும் நகர சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை திருஞானசம்பந்தர் சந்திரசேகர் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக நகர சபை தலைவரிடம் கேட்ட போது இரண்டு நாட்களாக குறித்த வேலைகள் ஆலய பகுதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.