ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்த அதே வேளை கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டிருக்கவில்லை.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan