மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Eastern Province NPP Government
By Kumar May 15, 2026 11:52 AM GMT
Report

எயார் பஸ் மோசடியின் பின்னால் உள்ளவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக ராஜபக்சர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரும் தப்பிக்கமுடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதுடன் விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை தென் மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக்குழுக் கூட்டமொன்று நேற்று(14.05.2026) பிரதேச தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றுள்ளது.

இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம்! காலக்கெடுவுடன் நீக்க அரசாங்கம் திட்டம்

இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம்! காலக்கெடுவுடன் நீக்க அரசாங்கம் திட்டம்

சட்டவிரோத செயற்பாடுகள்

இதன்போது,  இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் விரைவுபடுத்துதல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள் | A Meeting Held In Manmunai Sudhagar Ahead

சட்ட விரோதமான மதுபான உற்பத்தி மற்றும் சட்ட விரோதமாக மண் கடத்தல் ஆகிய செயற்பாடுகளை தடுப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை நகரில் வீதி புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனம் முறையாக புனரமைப்பு பணியை செய்யாமல் பாரியளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடைசெய்யும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரிப்பண மோசடி

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் ஆட்சி பீடம் ஏறும் போது மக்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஒரு விடயம் இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த ஊழல் மோசடிகளை இல்லாமச் செய்வதும், அதேநேரம் ஊழல் மோசடிகளோடு சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதுமாகும்.

ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பதையே எங்களது கொள்கையிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அந்த அடிப்படையிலே நாங்கள் அந்த விடயத்தை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  எதிராகக்கூட இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள் | A Meeting Held In Manmunai Sudhagar Ahead

எதிர்க்கட்சியினர்  எங்களுடைய செயற்பாடுகளை அரசியல் பழிவாங்கல் என மக்கள் மத்தியில் பரப்புரைகளை செய்து வருகின்றார்கள். இது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் கிடையாது.

தாங்கள் உழைத்துக்கொள்வதற்காகவும் தங்களது குடும்பங்களை வளர்த்துக்கொள்வதற்காகவும் பல மோசமான செயற்பாடுகளை கடந்த கால ஆட்சியாளர்கள் செய்து வந்தனர்.

இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்கின்ற விதமான பல செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பான சட்டரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்குத் தெரியும் பொலிஸ் துறையும் நீதித்துறையும் இன்று சுயாதீனமாக செயல்பட்டு வருகின்றது.

 எயார்பஸ் மோசடி

இந்த நிலையில் எயார்பஸ் மோசடி தொடர்பான ஒரு விடயம் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் போது அதன் பின்புலத்திலே ராஜபக்சக்கள் இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே தான் மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். ஆனால் அவர் தனக்கு ஆதரவாளர்களாக சிலரை அழைத்து வந்து, தங்களை புகழுரைக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள் | A Meeting Held In Manmunai Sudhagar Ahead

இங்கே எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் கூடுதலான தரப்பினர் எல்லா விதமான குற்றச் செயல்களிலும் மோசடிகளிலும் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையிலே நாங்கள் செயல்படுகின்றோம்.

அது பெரியவராக இருந்தாலும் சரி சிறியவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சட்டம் சமனாகவே செயல்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இ.சிறிநாத், மண்முனை தென்  மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் கிரேஸ்குமார் உட்பட திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

மரம் விழுந்து மின்கம்பி அறுந்ததால் நேர்ந்த விபரீதம்

மரம் விழுந்து மின்கம்பி அறுந்ததால் நேர்ந்த விபரீதம்

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US