மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மீது அதிரடி நடவடிக்கை
புதிய இணைப்பு
மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள செயளாலர் கீதாஞ்சலி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலய பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த கல்வி பணிப்பாளர் திருகோணமலையில் உள்ள மாகாண கல்வி திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும், கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால்
பட்டிருப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (09.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய முன்றலில் இருந்து பேரணியாக பட்டிருப்பு வலயகல்வி அலுவலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதன்போது இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அல்லது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளளனர்.
இதன் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர், பூ.பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
தமது பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கருத்திற் கொண்டு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை உடன் இடமாற்றம் செய்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது வருகைதந்த இராஜாங்க அமைச்சரின் செயலாளர் பூ.பிரசாந்தனிடம் மனுவை கையளித்த பிறகு ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |