நீதிமன்றத்திற்குள் சாராயத்தை எடுத்துச் செல்ல முயற்சித்த நபர்
கால் போத்தல் சாராய போத்தலை இடுப்பில் மறைத்து பாணந்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல முய்றசித்த ஒருவரை பாணந்துறை தெற்கு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பாணந்துறை மொரவின்ன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் முன்னர் நடத்திய சோதனையின் போது, சந்தேக நபர் 180 மில்லி லீட்டர் சாராய போத்தலை இடுப்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் அதனை கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடும் ஒருவரை பிணை எடுப்பதற்காக சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
வேறு எவருக்காவது கொடுப்பதற்காக சந்தேக நபர் சாராயத்தை எடுத்துச் சென்றரா என்பதை அறிய விசாரணைகளை நடத்துவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
