20 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்! 6 பேருக்கு மரண தண்டனை
இருபது வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (23.05.2023) மரண தண்டனை விதித்துள்ளது.
மரண தண்டனை விதிப்பு
ஹம்பாந்தோட்டை கொன்னொருவ மற்றும் கட்டன்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த சமன் புலத்கம, லலித் பிரசன்ன, ரணசிங்க ஆராச்சிகே ஜினதாச, ஹேவா ஹல்பகே வசந்த, திலான் மஞ்சுள மற்றும் எச்.எம்.நவரத்ன ஆகிய ஆறு பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2003 ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை, கட்டன்வெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய விஜேசிங்க கங்கணம்கே நந்ததிஸ்ஸ என்பவரை மரக் கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
