முல்லைத்தீவில் ஒருவர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (23.05.2024) இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினை சோதனை செய்த முள்ளியவளை பொலிஸார் வாகனத்தின் சாவி பெட்டியில் இருந்து ஒருகைக்குண்டு, ரி - 56 ரக தோட்டாக்கள் 20 மற்றும் எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் 6 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில், வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
