கொழும்பில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தர்
கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மாளிகாவத்தை - ஜயந்த வீரசேகர மாவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் இரும்புக் குழாய்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், அவரைக்
கைதுசெய்வதற்காக மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
