மாமாவை வாளால் வெட்டி கொலை செய்த மருமகன்
புத்தளம் (Puttalam) - மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்தக் கொலையை செய்துள்ளார் என்றும், சந்தேகநபர் இறந்தவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பழைய தகராறு காரணமாக மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் மாமனாரை மருமகன் வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
