வவுனியாவை சேர்ந்த ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியா - கற்பகபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளார்.
கற்பகபுரம் பகுதியில் 9 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.
சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகைதந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வருகைதந்த வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
அதில் 9 பேருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று உதியான நபர்கள் கிளிநொச்சி கோவிட் சிகிச்சை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 49 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி
மரணமடைந்துள்ளார்.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam