யாழில் தனது சொந்த பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் நபர்(Video)
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று(19.04.2023) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
தனது உண்ணாவிரதத்திற்கான காரணம் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடத்திலிருந்து கழிவு நீர் தன் வீட்டிற்குள் வருவதாக முறையிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இந்த முறைப்பாட்டையடுத்து யாழ்.மாநகர சபையால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபருடன் யாழ்.மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும்
அவர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



