மட்டக்களப்பில் காரில் சென்றவரை கைது செய்த புலனாய்வாளர்கள் : விசாரணைகள் தீவிரம்
புதிய இணைப்பு
மட்டக்களப்பு மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உட்பட அதிரடிப்படையினர் கண்காணிப்பு மற்றும் விசேட சுற்றிவளைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கும் பிரதான சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கைது நடவடிக்கை நேற்று (11.05.2024) இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
சம்பவதினமான நேற்று(11) மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலனாய்வு பிரிவினர் மாத்திரைகளை கடத்தி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, காரில் இருந்து 1440 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோத கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
