வவுனியாவில் தகாத செயன்முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி
வவுனியா (Vavuniya) - தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 15 வயது சிறுமியை தகாத செயன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வவுனியா - பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரே தகாத செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிக்கு குறித்த சிறுமியை அழைத்து சென்ற இளைஞர் போதை மருந்து கொடுத்து தகாத செயன்முறைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இம்மாதம் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி தகாத செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் தகாத செயன்முறைக்கு உடந்தையாக செயற்பட்ட அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரையும், தகாத செயன்முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam