ரஷ்யாவிற்கு எதிராக முக்கிய நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பு
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யா, சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அறிவித்துள்ளது.
எனினும் இந்த தீர்ப்பை ரஷ்யாவை கட்டுப்படுத்தாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமை மீறல் வழக்குகள்
குறித்த நீதிமன்ற கட்டமைப்பில் இருந்து 2022இல் ரஷ்யா நீக்கப்பட்டமையால், இந்த தீரப்பு ரஷ்யாவை கட்டுப்படுத்தாது.
இருந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான ஏனைய மனித உரிமை மீறல் வழக்குகளின்போது இந்த தீர்ப்பை செல்வாக்கை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்திருந்தன.
ஆரம்பத்தில் இருந்து உக்ரைய்ன் மீது, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் 2014இல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தியமை என்பன தொடர்பிலேயே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதில் தாக்குதலுக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 196 நெதர்லாந்து பயணிகள் உட்பட 298 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |