IMFயிடம் இலங்கை கடன் பெற பல மாதங்களாகும் அபாய நிலை
சீனாவுடன் இருதரப்புக் கடன்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படும் வரை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் ஈடுபட முடியாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் திட்டத்தில் வெற்றியடைவதற்கு, இலங்கையின் கடன்களுக்கு குறைந்தது 10 வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு சீனா உடன்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தில் ஈடுபடுவது இவ்வருடம் ஒகஸ்ட் அல்லது செப்டெம்பர் வரை தாமதமாகலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.