நீதிமன்றக் கட்டமைப்பின் குறைபாடுகள் குறித்து டுவிட்டரில் நேரடி கலந்துரையாடல்
அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் எண்ணக்கருவின் பிரகாரம் நீதிமன்றக் கட்டமைப்பின் குறைபாடுகள் குறித்து டுவிட்டரில் நேரடி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மறுசீரமைப்பு
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் எண்ணக்கருவின் பிரகாரம் இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் காணப்படும் குறைப்பாடுகள், மறுசீரமைக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், மாற்றங்கள் குறித்து இந்த கலந்துரையாடல் வாயிலாக பொதுமக்கள் நேரடியாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
கலந்துரையாடல்
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் (@Parliament.LK) ஊடாக இந்தக்கலந்துரையாடல் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு இதனை ஒழுங்கமைத்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் தேசிய பேரவை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.