முன்னணி போதைப்பொருள் வர்த்தகர் கைது
கடுவலை பிரதேசத்தின் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவரான 'வெலிவிட்ட சுத்தா' என்றழைக்கப்படும் மலலகே சுதத் கித்சிறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22.02.2024) ஹெரோயின் வைத்திருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
யுக்திய நடவடிக்கையின் கீழ் இதற்கு முன்னர் வெலிவிட்ட சுத்தாவின் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் கிடைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேருந்துகள், ஒரு ஆடம்பரக் கார் உள்ளிட்ட வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி கடுவலை நீதவான் குறித்த வாகனங்களை விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.
எனினும் ஹோமாகம மேல் நீதிமன்றம் குறித்த வாகனங்களை மீளக் கைப்பற்றுமாறு நேற்று (21) உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் வெலிவிட்ட சுத்தா இன்று காலை ஹெரோயினுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான வெலிவிட்ட சுத்தா பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று மறைந்து வாழ்ந்த நிலையில் அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
எனினும், விசேட சோதனை நடவடிக்கையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
