காலாவதியாகும் நிலையில் பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகள்
நாட்டில் பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் எட்டு மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் எதிர்வரும் மூன்று வார காலப் பகுதியில் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்கள்
நாட்டின் மொத்த சனத் தொகையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் நான்காம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக 13000 பேர் மட்டுமே நான்காம் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளில் இவ்வாறு கோவிட் தொற்று மீளவும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நன்காம் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருவதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.




