உயர்தர பரீட்சை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சையை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு ஒன்று கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில்
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,''வருடாந்தம் க.பொ.த உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை 13 வருடங்கள் மாணவர்களுக்கு கட்டாய கல்வி அவசியமாகும். எதிர்காலத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படும்.
பொருளாதார நெருக்கடி
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டெழத் தொடங்கியுள்ளது. ஏற்றுமதி பொருளாதார இலக்கினை கொண்டே எதிர்காலத்தில் நாட்டை முன்கொண்டு செல்ல முடியும்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதிய கல்வி திட்டம் தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் எதிர்பார்த்துள்ளோம்.
ஏனைய நாடுகளை போன்று எமது கல்வி திட்டத்தையும் மேம்படுத்தும் வகையில் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும்.‘'என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
