பேராசிரியர் ரகுராம் ஊடக நண்பர்களால் கௌரவிப்பு(Photos)
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்ற இளம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே தனது முழு நோக்கம் என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர், கலாநிதி எஸ். ரகுராம் தெரிவித்தார்.
கலைப்பீட பீடாதிபதியாகக் கடமையாற்றும் கலாநிதி எஸ். ரகுராம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று(14) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மூத்த பத்திரிகையாளர் சி.பாரதி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அனுபவம்
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஊடகத்துறையில் நான் பல காலங்கள் இருந்து வந்தமை பல அனுபவங்களை எடுத்துக்காட்டுகின்றது.
அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒரு அடையாளத்தினை எடுத்துக்காட்டியது இந்த ஊடகம் தான். ஊடகத்துறையில் இருந்த வேகமும் எனக்கான ஒரு அடையாளத்தினை எடுத்துக்காட்டியது.
நான் இருந்து மேலே படிப்படியாக உயர்வதற்குக் காரணம் பத்திரிகைத்துறையும், தொலைக்காட்சி செய்திப் பிரிவாகவும் தான் காணப்படுகின்றது. இதில் எதற்காகவும் பின் நிற்பது இல்லை.
எது என்றாலும் செய்வோம் என்ற நம்பிக்கைதான் எனக்குள் இருந்தது. மாற்றங்களை மாற்றவேண்டிய தேவையிருக்கின்றது.
முரண்பாடான சமூகம்
அதுவும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கதைக்கும்போது இவ்வாறான எண்ணங்கள் எழுகின்றன. ஊடகத்துறை என்பது எல்லோருக்கும் சாதகமான பாதைதான்.
உங்களுடைய ஊடகத்துறையில் நேர்மையாக இருந்து கொள்ளுங்கள். நிறையச் சொல்லவேண்டியதாக இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. செய்யவேண்டியதாக இருக்கிறது. ஆனால் அது தற்போது நான் வகிக்கும் பதவி நிலை இடையூறாக இருக்கிறது.
இதிலிருந்து கதைத்தால் கதை வேறுமாதிரி போய்விடும் என்ற தயக்கமும் இருக்கிறது. இன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்ற இளம் மாணவர்கள் அதிகம். அவர்களை நல்வழிப்படுத்துவதே எனது முழு நோக்கமாக இருக்கிறது.
பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை தன்மானம் பாதிக்காத வகையில், உழைத்து உண்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். முரண்பாடான சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
இதற்காகக் கேட்கவேண்டியதைக் கேட்போம், உடைக்க வேண்டியதை உடைப்போம். அதன் ஊடாக மாணவர்களின் வளமான எதிர்காலம் சிறக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 மணி நேரம் முன்

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
