வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரசு நிறுவனங்கள்
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக ஏராளமான அரசு நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு - 2025” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

சீமானுக்கு தலைவர் பிரபாகரன் நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கினார்: மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்!
நிர்வாக அமைப்பு
“பல அரச நிறுவனங்களை நடத்துவதற்கு இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு தோல்வியடைதுள்ளமை மட்டுமல்லாமல், இதன் நிர்வாக அமைப்பு மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைள் வரவுசெலவுத் திட்டத்தில் மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளன.
எனவே, இந்த நிறுவனங்களை நாங்கள் பழைய கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. நிறுவனங்களில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பங்குச் சந்தை
குறிப்பாக, இந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து, பங்குச் சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை வெளியிடுவது சாத்தியமா என்பதை நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
நிறுவனங்கள் மற்றும் வாரியங்களைப் பற்றி சிந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். நான் அதை வெளிப்படையாகச் சொல்வேன்.
இந்த நடவடிக்கைகளின் போது, சில நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் இணைக்கப்பட வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்கள் கவனத்தை மாற்ற வேண்டியிருக்கும். அந்த அடையாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
