வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்ட வரலாற்று நூல்
மன்னார் (Mannar) ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய 'மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' நூல் வவுனியா பல்கலைக்கழக (Vavuniya University) துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கையளிப்பு நிகழ்வானது, வவுனியா பல்கலைக்கழகத்தில் மன்னார் ரோட்டரி கழகத்தின் செயலாளர் தி.தனேஸ்வரன் மற்றும் நூலாசிரியர் எஸ் .ஜெகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
இந்த நூலானது மகாவம்ச விஜயனும் 700 தோழர்களும் இலங்கையில் வந்து இறங்கிய இடமானது மன்னார் கட்டுக்கரை பிரதேசம் என்பதை சங்ககால இலக்கிய நூல்களான கம்பராமாயணம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உட்பட மகாவம்சம் போன்ற நூல்களின் ஆதாரத்தோடும் தற்கால வரலாற்றாசிரியர்களின் நூல்களின் துணையோடும் கூறியுள்ளது.
உத்தியோகபூர்வ வெளியீடு
மேலும், பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இந்த நூல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலானது கடந்த 23ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்கு பின்னால் பலத்த சந்தேகங்கள்: பல்கலைக்கழக பேராசிரியை குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |