வரலாற்று சிறப்புமிக்க வெற்றி:மக்களின் பலத்திற்கு துப்பாக்கிகள் அடிப்பணிந்தன
இலங்கைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளதாக அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சார்பில் சேனாதி குருகே தெரிவித்துள்ளார்.
மக்களின் பலத்திற்கு துப்பாக்கிகள் அடிப்பணிந்தன

சகோதரர்களே இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. மக்களின் பலத்திற்கு துப்பாக்கிகள் அடிப்பணிந்தன.
இராணுவத்தினரும் பொலிஸாரும் எங்களுடன் போராட்டத்தில் இணைந்துக்கொண்டனர். அடுத்து ஆட்சியமைக்கும் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் விளையாட நினைக்கக் கூடாது.
அந்த விளையாட்டுக்கள் முடிந்து விட்டன. அப்படியான விளையாட்டுக்களால் அவர்கள் நாட்டை மீண்டும் பின்நோக்கி கொண்டு செல்ல இடமளிக்க மாட்டோம்.
ஒரு வருடத்திற்குள் நாட்டை மிகவும் முன்னேறிய இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேனாதி குருகே கூறியுள்ளார்.