தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூண் சரிந்தது
தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூணான மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் (Dr.T.W.Jeyakularajah) மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சார்பில் ஆத்மார்த்தமான அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஜெயகுலராஜா, தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர். ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப்பணிக்காக தன்னை அவர் அர்ப்பணித்துள்ளார்.
தனிமனித சரித்திரம்
தனது தியாகம் நிறைந்த பணியினாலும் போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும் மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும் எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
