ஆப்கானிஸ்தானில் வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு : 6 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹிராத் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தூதரகம் கண்டனம்
துப்பாக்கிச்சூடில் இறந்தவர்களில் பள்ளிவாசலின் தலைமை மதகுருவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூலில் உள்ள ஈரான் தூதரகமும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பினரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |