தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு குழு!
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று மதியம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொதுக்கட்டமைப்பை உருவாக்கல்
கடந்த கூட்டத்தில் பொதுக்கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக்கட்டமைப்புக்கான அழைப்பாளர் குழு தெரிவு செய்யப்பட்ட நிலையில் அந்த குழு, கலந்துரையாடலில் பங்கேற்காத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நினைவேந்தலை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

15 பேர் கொண்ட குழு
இதற்கமைவாக மதகுருமார்கள், யாழ்ப்பாண
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின்
பிரதிநிதி, சிவில் சமூக பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,
முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட
பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam