கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்
கனடாவில் தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
அஜக்ஸ் நகரை சேர்ந்தவர் ஜீவகுமார் சிவபாதம் (54). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் டிராவில் (கனேடிய $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது.
இந்த தகவலை Ontario Lottery and Gaming Commission வெளியிட்டுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சிவபாதம் கூறுகையில்,

இது தான் எனது முதல் பெரிய வெற்றி. நான் என் லொட்டரி டிக்கெட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது. ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு.
பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan