ஜனாதிபதிக்கு டுபாயில் மகத்தான வரவேற்பு!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெறவுள்ள 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10.02.2025) பிற்பகல் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
இராப்போசன விருந்து
ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ,மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்திக்க உள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டுபாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற எதிர்கால அருங்காட்சியகத்தில்(Future Museum) நடைபெறும் ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)