யாழில் ஆரம்பமான மாபெரும் வர்த்தக கண்காட்சி..!
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23.08.2024) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம்
இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும்.

இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் பேனகார், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்.பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்ட.
இந்நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.



திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri