கம்பஹாவில் காணாமல்போன யுவதி தொடர்பில் வெளியான தகவல்
கம்பஹா - அத்தனகல, ஒகடபொல பகுதியில் காணாமல்போனதாக கூறப்படும் யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை காணாமல் போனதாக கூறப்படும் யுவதியின் தாயார் இன்று (19.05.2023) ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாத்திமா இல்மா (வயது 17) என்ற யுவதியே நேற்றுக் காலை முதல் காணாமல்போயிருந்ததாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொலைபேசி பாவனை
இந்தச் சம்பவம் தொடர்பில் யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் தகவல் தெரிவிக்கையில், ''தொலைபேசி பாவிக்க வேண்டாமென நான் மகளிடம் கூறினேன். இதனால் இருவருக்கும் இடையில சிறு தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்றுக் காலை முதல் அவர் காணாமல்போயிருந்தார்.
நேற்றிரவு 9 மணியளவில் தெஹிவளை பொலிஸாரிடமிருந்து, மகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பின்னர் இரவு 11 மணியளவில் மகளை நாம் பொறுப்பேற்றோம்." என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
