தாயுடனான பணக்கொடுக்கல் வாங்கல் தகராறுக்கு மகனைக் கடத்திய வர்த்தர்
கண்டியில் பெண்ணொருவருடனான கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், பெண்ணின் மகனைக் கடத்திய நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹந்தான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் 16 வயதுடைய மகன் கடந்த 15ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் கொடுக்கல் வாங்கல் தகராறு
இதற்கமைய தனது மகனை கடந்த 15ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டதாக அந்த பெண் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
12 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தொழிலதிபரிடம் வழங்கிய காசோலைகள் காரணமாக கடத்தல் இடம்பெற்றதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே சிறுவனைக் கடத்திச் சென்று பின்னர் மாவனெல்லையில் சிறுவன் விடுவித்து, பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்கு பணத்தையும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
