யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று வாளை காட்டி மிரட்டியதுடன் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று(03.08.2024) இடம்பெற்றுள்ளது.
மூர்க்கத்தனமாக தாக்குதல்
சாவகச்சேரியை சேர்ந்த குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் ஹையஸ் ரக வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை, இடையே மறைத்து வாளுடன் வந்த கும்பல் ஒன்று குறித்த இளைஞனை வெளியே இழுத்து மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
குறித்த இளைஞன் அராலியை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்தக் காதலுக்கு யுவதியின் தாயார் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த யுவதி கடந்த நான்காம் மாதம் முதல் இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றையதினம்(03) அராலி பகுதிக்கு குறித்த இளைஞன் சென்ற வேளை, யுவதியின் தந்தை, தந்தையின் சகோதரர்கள், யுவதியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
