கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் இரண்டு கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 459 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இருதய நோய் மற்றும் நீரிழிவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர், முல்லேரியா வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
பக்டீரியா தொற்று மற்றும் கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan