டொலர் இல்லை:நான்கு நாட்களாக கடலில் நிற்கும் எரிபொருள் கப்பல்
டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை விடுவிக்க பணம் செலுத்தப்படாத காரணத்தினால், அந்த கப்பல் நான்கு நாட்களாக இலங்கை கடல் எல்லைக்குள் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இரண்டு வகையான தலா 20 ஆயிரம் மெற்றி தொன் எரிபொருள் இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த எரிபொருள் தொகையை விடுவிப்பதற்காக சுமார் 50 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதற்கான தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும் டொலர் கிடைப்பது தாமதமாகி வருவதால், தாமத கட்டணமுமு் பெரியளவில் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri