மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய மேட்டு நிலப் பயிர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த அடை மழை காரணமாக மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த மேட்டுநிலப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மரக்கறித் தோட்டங்களில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் வழிந்தோடுவதற்கு முடியாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து நீரை வெட்டி வாய்காலுக்கு அனுப்புவதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நடந்தது என்ன: மன்றில் சிறீதரன் சீற்றம்
வடிவகான் வசதிகள்
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேட்டுநிலப் பயிற்செய்கைக்குப் பெயர்போன களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல கிராமங்களிலும் செய்கை பண்ணப்பட்டிருந்த மிளகாய், கத்தரி, மரவள்ளி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர்களும், தோட்டங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டுள்ளதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் தாம் மிகுந்த இன்னல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், முறையான வடிகான் வசதிகளை சம்மந்தபபட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தரப்படும் பட்சத்தில தாம் இவ்வாறு வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனர்த்ததிலிருந்து தமது பயிர்களையும், தோட்டங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்கள்
தற்போது பெய்துவரும் பலத்த அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தின் எல்லை நகரில் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களது வீடுகளிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கி வருகின்றார்கள்.
அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், அம்மக்களுக்குத் தேவையான வசதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான உலர் உணவுகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை கிராமிய வீதிகள் இராஜாக அமைச்சர் சந்திரகாந்தன் ஆலோசனைக்கு அமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இராஜாக அமைச்சர் சந்திரகாந்தன் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
இதன்போது அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தர் கோகுலன் ஆலய தலைவர்
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதிகளவான மழை வீழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் வாகனேரி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30மணியளவில் முடிவடைந்த நேரத்தில் வாகனேரி பகுதியில் 174 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடம்பெயர்வும் அதிகரித்துவருகின்றது.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால் இரண்டு படகுசேவைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு படகுப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலை காணப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தகவல்-குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |