இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக நடந்த விடயம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக நான்கு பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர்கள்
தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வருவதோடு பத்மினி வீரசூரிய, களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக உள்ளார்.

அத்துடன், ரேணுகா ஜயசுந்தர, பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
மேலும், மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, நீண்ட காலமாக மாநில புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam