மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாப மரணம்(Video)
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மரம் வெட்டும் கூலித்தொழிலாளியாகிய இவர் நேற்றைய தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரத்தினை கூலிக்காக வெட்டச் சென்றுள்ளார்.அப்போது மரத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட போது மரத்தினுள் வீழ்ந்து அகப்பட்டுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த நிலையில் நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam