பொதுமக்களை ஏமாற்றிய விவசாயிக்கு நேர்ந்த கதி
யூரியா உர மூடைகளை பெற்றுத்தருவதாக கூறி பணத்தினை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய விவசாயி ஒருவருக்கு பொதுமக்கள் தண்டனை வழங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிலுள்ள கஹகொள்ளாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
யூரியா உர மூடைகளை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிய நபரொருவரை மரத்தில் கட்டி வைத்து மீண்டும் பணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் விடுவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள நபர் ஒருவருக்கு இதற்கு முன்னர் யூரியா உர மூடைகள் மூன்றினை ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன்போது, இன்னும் சில உர மூடைகளை பெற்றுத்தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு உரத்தை வழங்காது ஏமாற்றி திரிந்த விவசாயி ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan