மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!
மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கேகாலை பொலிஸ் பிரிவில் நேற்று (26.05.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வசந்த பண்டார(47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
உறவினரின் வீட்டுக்கு இவர் சென்ற போதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் வந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தர் போதைப்பொருள் விற்பனை வழக்கொன்றில் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு அண்மையில்தான் விடுதலையானார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |